தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தலைவர்களின் பெயரில் ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படும்
அந்த அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கும் பாவேந்திரன் பாரதிதாசன் விருது கே. ஜீவ பாரதிக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும் விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விருது பா. வளர்மதிக்கு கொடுக்கப்பட்டது பற்றி ஆ. ராசா கூறியதாவது.
பெரியார் ஜாதியை ஒழிக்க நினைத்தார் என்றும் ஜாதி கடவுளின் அடைப்படையில் வருவதாக கூறிய தால் தான் பெரியார் கடவுளை வெறுத்தார் என்றும் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட பெரியார் விருதை ஜெயலலிதாவுக்கு தீச்சட்டி எடுத்த வளர்மதிக்கு கொடுத்துள்ளனர்.
பெரியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் வளர்மதிக்கு விருது கொடுத்த எடப்பாடியை தடியால ஓட ஒட அடித்திருப்பார் என கடுமையாக விமர்த்துள்ளார்.