ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஏலம் இன்று மற்றும் நாளையும் பெங்களூரில் நடக்கிறது.
இதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது. ஆனால் வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அஸ்வினை ஏலம் எடுப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை அணிக்கு பதிலாக அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.
மொத்தம் 7.60 கோடிக்கு அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
இந்த முறை சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது.
இதை மற்ற வீரர்களுக்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அஸ்வினை மற்ற அணி ஏலம் எடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வினை மற்ற அணிகள் அதிக விலைக்கு கேட்டும் பிரீத்தி சிந்தா அவரை விடாமல் ஏலத்தில் எடுத்துள்ளார்.
மேலும் அஸ்வினை நீண்ட போராட்டத்திற்கு வாங்கிய மகிழ்ச்சியில் பிரீத்தி சிந்தா துள்ளி குதித்துள்ளார்.