தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பால் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய்.
இவர் படத்தில் நடிப்பை தாண்டி இவரிடம் அனைவருக்கும் பிடித்த விஷயம் அவருடைய நடனம் தான்.
இந்நிலையில் இமான் அண்ணாச்சி விஜய் எஸ்.ஏ சந்திர சேகரன் இயக்கி வரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகிறார்.
இந்த படம் பற்றி இமான் அண்ணாச்சி பேட்டியளித்த போது கூறியதாவது.
இந்த படத்தின் காட்சிகளிலும் பாடலிலும் என்னை இயக்கிய இயக்குனர் மிக நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்.
எனக்குள் இப்படி ஒரு நடன திறமை இருப்பதை இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன் .
எனவே இனி வரும் படங்களில் நடிகர் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டி போட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.