பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக செயற்பட்ட போது, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,39,000 ரூபாவைப் பயன்படுத்தி அவருக்கு சொந்தமான வீட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காகவே தற்போது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டிற்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகளின் மறுப்பு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.