நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்குவார்களேயானால் சுதந்திரக் கட்சியின் ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் ஆட்சியொன்றை உருவாக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றிணைவது குறித்து ஜனாதிபதி நேற்று வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால், அனைவரும் இயல்பாகவே ஜனாதிபதியுடன் கூட்டிணைய தயாராக இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க தயாரென ஜனாதிபதி கூறியதானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்குகளை குறைப்பதற்காகவே என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.