பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் கடந்த சில மாதங்களாகவே ஆவேசமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு, அனிதா தற்கொலை, நெடுவாசல் ஆகிய பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்த விதமே தனி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்க் அவர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
கருணாநிதி தமிழுக்காகவே காலம் முழுவதும் தொண்டு செய்தவர்.
அவ்ர் உடல்நிலை காரணமாக எழுந்து நிற்காமல் இருப்பதற்கும், விஜயேந்திரர் நிற்காமல் இருந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
கருணாநிதி அவர்கள் உடல்நிலை சரியில்லாததால் அவர் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முன்னால் அவர் உடல் நலத்துடன் இருந்தபோது எழுந்திருக்காமல் இருந்திருக்கின்றாரா?
கருணாநிதியால் இயலவில்லை அதனால் அவர் எழுந்திருக்கவில்லை.
அதேபோல் மடாதிபதியால் இயலவில்லையா? இன்னும் என்னவெல்லாம் அவரால் இயலவில்லை என்பதை சொல்லிவிடுங்கள்.
அவர் எப்ப எழுந்திருப்பார், எப்ப எழுந்திருக்க மாட்டார்’ என்பதை தெரிந்து கொள்கிறோம் இனிமேல் மடாதிபதி என்றுமே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டாரா?
எவன் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க மாட்டானோ, அவனையெல்லாம் நாட்டை விட்டு அனுப்பிவிடுவோமா?