ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இலங்கை வீரர் லசித் மலிங்கவிற்கு இந்த வருடம் ஐ.பி.எல் இல் இடமில்லாமல் போனது நம்ப முடியாததாக உள்ளது.
11ஆவது ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் சில முக்கிய வீரர்கள் தெரிவுசெய்யப்படவில்லை.
அதிலும் ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கவை இந்த வருடம் எந்த அணியும் ஏலத்தில் பெறவில்லை. 2009ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் இல் விளையாடி வரும் இவர் 110 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எனினும் கடந்த வருடம் 12 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்தார். இதன்போது அதிக ஓட்டங்களையும் எதிரணிக்கு வழங்கியிருந்தார்.
இதன் சராசரி விகிதத்தின் அடிப்படையிலேயே இம்முறை ஐ.பி.எல் இல் மலிங்கைவை தேர்வுசெய்ய எந்த அணியும் முன்வரவில்லை என குறிப்பிடப்படுகிறது.