அபோடெக்ஸ் மருந்து நிறுவனத்தின் நிறுவுனர் பரி ஷெர்மன் மற்றும் அவருடைய மனைவி ஹனி ஷெர்மன் ஆகிய இருவரின் மரணமும் திட்டமிட்ட கொலை என ரொறன்ரோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ரொறன்ரோ பொலிஸ் பிரிவின் அதிகாரி சந்தேக நபர்கள் தொடர்பாக விவாதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களின் கொலை குடும்பத்தினரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபோடக்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை உருவாக்கி அதனை பிரபலப்படுத்திய பரி ஷெர்மன் மற்றும் அவருடைய மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோரின் மரணத்துக்கு கனேடிய பிரதமர், அஸ்ரேல் தூதரகம், ரொறன்ரோ மேயர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவிக்க கனடாவின் வணிக, அரசியல் சமூகங்கள் திகைத்து நின்றது.
இவர்களின் மரணம் தற்கொலையாக ஆரம்பத்தில் நோக்கப்பட்ட போதிலும் தற்போது திட்டமிட்ட கொலை என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.