மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அமையும். இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
கட்சிகளை கடந்தது நாடு. எனவே அனைவருக்கும் பயன்கொடுக்கும் இந்த வரவுசெலவுத் திட்டத்தை மக்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது என அனைத்து கட்சியினரும் ஆலோசிக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.