Loading...
முடிந்தால் தமது பிரஜா உரிமையை பறித்துக்காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதுதே அவர் இதனை தெரிவித்தார்.
தமது பிரஜா உரிமையை நீக்கிவிட முடியும் என பிரதமர் கூறிவருகிறார்.
முடிந்தால் அவ்வாறு அவர் மேற்கொள்ளட்டும்.
Loading...
நாட்டில் உள்ள வழங்கு தாரர்களை பிரதமர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடும்.
ஆனால் நாட்டில் இல்லாத சட்டதிட்டங்களை கொண்டு, பிரஜா உரிமையை நீக்க முடியாது.
நீதி துறையை சார்ந்தவர்கள் பக்கசார்பாக நடத்து கொள்ளமாட்டார்கள் என தாம் நம்புவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Loading...