பிரான்ஸ் பிரஜைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் ஒவ்வொரு நபருக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஐஎஸ் ஜிகாதி அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி மொராக்கோவைப் பூர்வமாகக் கொண்ட ஜேர்மன் பெண்ணுக்கு ஈராக் நீதிமன்றம் ஒன்று தூக்குத்தண்டனை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet கூறுகையில், மத்தியக் கிழக்கு நாடுகள் எங்கள் நாட்டு மக்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் பிரான்ஸ் தலையிடும்.
ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகள் பிரான்சு குடிமக்களுக்கு மரண தண்டனை வழங்கினால், ஒவ்வொரு குடிமகனுக்காகவும் அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
130 உயிர்களைப் பலி வாங்கிய பாரிஸ் தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள் உட்பட ஐரோப்பாவில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு இந்த அமைப்பே காரணமாக இருந்தது.
இந்நிலையில் சர்வதேச கூட்டுப்படையினர் ஐஎஸ் அமைப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பலர் தற்போது ஈராக் மற்றும் சிரிய நாட்டுச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.