Tinder எனப்படுவது பயனர்கள் வசிக்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் ஆகும்.
2012ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ் வலைத்தளத்தின் ஊடாக தமது இருப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் சாட் செய்ய முடியும்.
இதனை டேட்டிங் அப்பிளிக்கேஷனாகவும் பயன்படுத்த முடியும்.
தற்போது இந்த தளம் தொடர்பில் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இங்கு பதிவேற்றப்படும் புகைப்படங்களை ஹேக்கர்கள் இலகுவாக பார்வையிடக்கூடியதாக இருப்பதாகவும், அனுமதியின்றி படங்களை மாற்றியமைக்கக்கூடியதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறைபாட்டினை Checkmarx Security Research Team கண்டுபிடித்துள்ளது.
இதற்கு காரணம் குறித்த தளத்தில் HTTPS என்கிரிப்ஷன் ஆனது பலவீனமாக இருக்கின்றமையே என தெரிவித்துள்ளனர்.
அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் Tinder அப்பிளிக்கேஷனும் பாதுகப்பு அற்றது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.