Loading...
கூகுள் நிறுவனம் Bulletin எனும் புதிய அப்பிளிக்கேசனை பரீட்சிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள குறித்த அப்பிளிக்கேசன் ஆனது உள்ளூர் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மக்கள் அனைவரும் தமது பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை வழங்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
Loading...
படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான செய்திகளை மக்கள் வழங்க முடியும்.
இந்த அப்பிளிக்கேசன் ஊடாக நேரடியாகவே வீடியோ பதிவு, புகைப்பட பதிவு என்பவற்றினையும் மேற்கொள்ள முடியும்.
முற்றிலும் இலவசமான இந்த அப்பிளிக்கேசன் குறைந்த கோப்பு அளவு உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...