இளைய தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமானது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவெற்றியினை பெற்றது.
காதலின் பெருமை பேசும் படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது.
அத்தகைய திரைப்படம் குறித்த சுவையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்பட கதை யாருக்காக எழுதப்பட்டது தெரியுமா.!
அது என்னவெனில், “இப்படத்திற்கு முதலில் வடிவேலுவை நினைத்து தான் கதை எழுதினேன்.
வடிவேலுக்கு கதை மிகவும் பிடித்துபோனது. அவர் நடிப்பதாக கூறினார்.
தயாரிப்பாளர்களை தேடினோம். யாரும் முன்வரவில்லை. பின்னர் கதையை நடிகர் முரளிக்காக கொஞ்சம் மாற்றினேன்.
முரளிக்கும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
பின்னர், இந்தக் கதையை விஜய்யிடம் கூறினேன். அவர் கதைகேட்டுவிட்டு அடுத்த நாளே எனக்கு கதை ஓகே, சூப்பர்.
இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்றார். விஜய் நடிக்கிறார் என்றதும் கதையில் ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் என கமர்ஷியலாக சில மாற்றங்கள் செய்தோம்”
என துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் எழில்.