Loading...
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும்.
காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 இற்கு விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்.
நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...