புதுச்சேரியில் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க 3 பேரை கொலை செய்த மனைவி, நான்காவது நபரை கொல்ல திட்டமிட்ட போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, ராமுவுக்கும் முன்னாள் சபாநாயகர் சிவகுமாருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில் பின்னர் அது பகையாக மாறியுள்ளது.
இந்நிலையில் ராமு, எழிலரசியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சிவகுமார் தான் ஆட்களை ஏவி தனது கணவரை கொன்றார் என்ற விடயம் எழிலரசிக்கு தெரியவந்த நிலையில் ராமுவை கொன்றவர்களை பழிவாங்கியே தீருவேன் என அவர் சபதம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி சிவக்குமார், ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர்.
வழக்கு சம்மந்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எழிலரசி மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அது ரத்து செய்யப்பட்டதால் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இதையடுத்து காரைக்காலை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தனை கொலை செய்ய திட்டமிட்ட எழிலரசி அது தொடர்பாக தனது கூட்டளிகளுடன் தனியார் ஹொட்டலில் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் ஹொட்டலுக்கு சென்ற அவர்கள் எழிலரசி மற்றும் அவரின் கூட்டாளிகள் 13 பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையில், எழிலரசியை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.பி ராஜிவ் ரஞ்சன் கூறியுள்ளார்.