கனடாவில் கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒன்ரோறியாவின் ஒட்டாவா நகரில் தான் இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 10.20 மணிக்கு நடந்துள்ளது.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், காரில் படுகாயங்களுடன் இருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காரின் ஜன்னல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
மருத்துவமனையில் பிரவுனே (22) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார், அடிப்பட்ட இன்னொரு 22 வயதான இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.
இருவர் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார், சம்பவத்தை பார்த்த சாட்சிகள் யாராவது இருந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.