கடந்த சில வாரங்களாக சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு பிரதானமாக செய்தியாக பேசப்பட்ட நிலையில், வரலாற்றிலேயே, ஜனவரி மாதம்தான் வெப்பம் அதிகமான காலகட்டமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் சராசரியாக ஆறு டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
Valaisஇன் Sion நகரத்திலுள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது, இது வழக்கத்தைவிட ஒரு டிகிரி அதிகமாகும்.
ஆல்ப்ஸ் மலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள பல இடங்களில் 1864 முதல் இதுவே பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்பமான காலகட்டம் ஆகும்.
மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து அடிக்கடி வீசும் புயல் காற்றும் இந்த வெப்பநிலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். அட்லாண்டிக் பகுதியிலிருந்து தொடர்ந்து வீசும் வெப்பக்காற்றுகள் வெப்பநிலையை உயர்த்தி சுவிஸ் சமவெளியில் குளிர்ந்த காற்று தங்காமல் தடுக்கின்றன.
இது குளிர்காலத்தில் நிகழும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆனால் உயரமான பகுதிகளில் மாதம் முழுவதும் சாதாரண வெப்பநிலையே காணப்பட்டது.
இந்த மாதத்தில் பனிப்பொழிவு, காற்று, அதிக வெப்பம் என அனைத்து வகை வானிலை நிகழ்வுகளும் காணப்பட்டன.
2017 ஆம் ஆண்டு ஜனவரி இதற்கு நேர் மாறாக 30 வருடங்களில் அதிக குளிர் உடையதாக இருந்தது, ஆனால் இந்த அளவிற்கு பனி பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.