Loading...
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 270கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் மலையில் புவிக்குக் கீழே 180கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஐரோப்பிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Loading...
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6புள்ளி 1ஆகப் பதிவாகியுள்ளது. இந்துகுஷ் மலையையொட்டிய பகுதிகளான தஜிக்கிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் ஏதும் இல்லை.
Loading...