Loading...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் மீர் தர்காவில் நடைபெற்ற உர்ஸ் ((urs)) உற்சவத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் மீர் தர்காவில் ஆண்டுதோறும் உர்ஸ் உற்சவம் நடைபெற்று வருகிறது. சந்தன கூடு திருவிழாவை ஒட்டி நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹமான் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
Loading...
ஏ.ஆர். ரகுமான் வருகையையொட்டி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை காண தர்கா முழுவதும் கூடியிருந்தனர்.
இதனால் தர்கா மற்றும் அதன்சுற்றுப்புறங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Loading...