Loading...
கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க 6 வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீநிவாச மூர்த்தி தலைமையிலான 6 வது ஊதியக்குழு முதலமைச்சர் சித்தராமையாவிடம் பரிந்துரைகளை இன்று வழங்கியது.
இதில் மாநில அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த பரிந்துரையை ஏற்று செயல்படுத்தும் போது 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உட்பட 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதனால் பயன்பெறுவார்கள்.
கடந்த முறை சதானந்த கவுடா தலைமையிலான பா.ஜ.க. அரசு 22 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கியது.
Loading...