மேகாலயாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடை அணிந்து சென்றதாக பா.ஜ.க கூறியுள்ளது.
மேகாலயா சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, ஷில்லாங்கில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது, அவர் விலை உயர்ந்த மேலாடை ஒன்றை அணிந்து இருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் 70 ஆயிரம் ரூபாய் என்றும் பா.ஜ.கவினர் கூறியுள்ளனர்.
இந்த மேலாடை லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பர்பெரி ((burberry)) நிறுவனத்தின் தயாரிப்பு எனவும் பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் அரசில் ஜி.எஸ்.டி. வரி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வளர்ச்சி குறைவு என கூறும் ராகுல்காந்தி, விலை உயர்ந்த ஆடையை எவ்வாறு வாங்கி அணிந்தார் என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.