151 வருடங்களின் பின்னர், சந்திரன் இன்று (புதன்கிழமை) பூமிக்கு மிகவும் அருகில் தோற்றமளிக்கவுள்ளது.
சுப்பர்மூன் என அழைக்கப்படும் இன்றைய பௌர்ணமி நிலவில் 3 விசேட அம்சங்கள் உள்ளதால் அது மூன்று விதமாக அழைக்கப்படுகின்றது.
சுப்பர் மூன் ஏற்படும் சமயத்திலேயே கிரகணமும் ஏற்படுகிறது. இதனால் சந்திரன் சிவப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும் என்பதால் அதனை ‘இரத்த நிலா’ எனவும் அழைக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது பௌர்ணமி என்பதால், அது நீலநிலா எனவும் அழைக்கப்படுகிறது.
கடந்த 1866 ஆம் ஆண்டுக்கு பின்னர், இவ்வாறு 3 அம்சங்கள் ஒரே தடவவையில் வருவது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கையில் கிழக்கு பகுதியில் பிற்பகல் 6.15 முதல் 8.41 வரையிலான கால இடைவேளையில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் வடமெரிக்காவின் பல பகுதிகளில் தென்படவுள்ளது.