ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறு ஒரு தினத்தை பெற்றுதருமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த கோரிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை மண்டியிட வைத்த விவகாரம் தொடர்பில், பெப்ரவரி 1 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முதலமைச்சருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் தேர்தல் தொடர்பான கூட்டம் காரணமாக அன்றைய தினத்தில் முன்னிலையாக முடியாது என ஊவா முதலமைச்சர் கடிதம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
எனினும் குறித்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நியாயமான காரணமின்றி ஆணைக்குழுவின் உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என அந்த ஆணைக்குழு ஊவா மாகாண முதமைச்சருக்கு கடிதம் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.