நாட்டில் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டால் மாத்திரம் அபிவிருத்திகளை செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாமல் போனால் மொழி, சமயம், கலாச்சாரம் எல்லாமே கேள்விக்குறியாக மாறிவிடும் என்றும் வியாளேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வாகரை பிரதேச சபைக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே வியாளேந்திரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பேசிவிட்டு வெளியே சென்றால் வெள்ளை வானில் கடத்தி விடுவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் நடைபெற்றது என தெரிவித்த வியாளேந்திரன இதற்காக பல உயிர்களை, பல தியாகங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக தளவாய் பகுதியில் பல ஏக்கர் காணிகள் விற்றவர்கள். தற்போது தமிழ் மக்களை பாதுகாக்க போகின்றோம் என்று வந்துள்ளதாக தெரிவித்த வியாளேந்திரன் கடந்த அரசாங்க காலத்தில் பேசிவிட்டு வெளியே சென்றால் வெள்ளை வானில் கடத்தி விடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தியவர்கள் யார் என்பதை யாரும் மறந்து விட முடியாது. தற்போது அந்த நிலைமை சீராக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் எம்மவர்களை, புத்திஜீவிகளை கடத்தியதாகவும் வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கையில் இருப்பவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மற்றைய சமூகத்தினரும் எங்களை, எம்மவர்களை சூழ்ச்சிகரமான வலைக்குள் இழுந்து எம்மவர்களின் கண்களை குத்துகின்ற கபட நாடகத்தை நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தலில் செய்ததாக குறிப்பிட்ட வியாளேந்திரன்
இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் அவ்வாறான கபட நாடகங்களை செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.