சிவசக்தி ஆனந்தன் சொல்லும் பொய்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தாங்கள் கூறும் உண்மைகளுக்கு கொடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்
யாழ்ப்பாணம் – நீராவியடியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை இலஞ்சம் என்று புத்தியுள்ள யாரேனும் கூறுவார்களா? எனவும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக அவருக்கு வீடு ஒன்று கொடுக்கப்பட்டது. அதையே அவர் கட்சி அலுவலகமாக பாவிப்பதாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்
அந்த அலுவலகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்த பின்னரே அதை விட்டு செல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களுக்கு வாக்களித்த சிவசக்தி ஆனந்தன் தற்போதுள்ள வரவுசெலவுத்திட்டத்துக்கு வாக்களிக்காமல் எம்மீது குற்றம் சுமத்துகின்றார் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.