இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத்தாளின் சிறப்பம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.
ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத்தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆயிரம் ரூபா நாணயத்தாளும் 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சி சாலையிலும்
மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் பெற்று கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளில் நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.