தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்திலிருந்து – தமிழ்நாட்டுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்
மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்;.
மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன.
மன்னார் மாவட்ட விவசாயக் குளங்களைப் புனரமைத்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவம் திட்டமிட்டுள்ளதாகவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.