யாழ்ப்பாணம் – தொண்டமானாறு கடற்கரைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை திமிங்கிலத்தினுடைய முள்ளந்தண்டின் பாகம் கரையொதுங்கியுள்ளது.
தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் தொழிலுக்காக கடலுக்குச்சென்ற வேளை, கடலில் நீரில் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் குறித்த முள்ளந்தண்டின் பாகம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட பாகம் 50 கிலோ எடைகொண்டதாகக் காணப்படுகின்றது. இது 3300 கிலோ எடைகொண்ட நீலத்திமிங்கிலத்தினுடைய முள்ளந்தண்டின் பாகம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த திமிங்கிலமானது கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரியது என்றும் அண்ணளவாக 300 ஆண்டுகள் வாழக்கூடியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட முள்ளந்தண்டின் பாகத்தை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருவதோடு, இதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.