கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
மாலை 4.38 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும்.
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.38 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.
உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உங்கள் மரியாதைக் கூடும். மதிப்புக் கூடும் நாள்.
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.38 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகை களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.