இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் மொமினுல் ஹக் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று வங்கதேசத்தின் சிட்டாகாங் நகரில் தொடங்கியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 374 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் வீரர் மொமினுல் ஹக் அபாரமாக விளையாடி 175 ஓட்டங்கள் குவித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.
160 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்களை ஹக் தொட்டார்.
இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் எடுத்த வங்கதேச வீரர் என்ற சாதனையை ஹக் படைத்துள்ளார்.
வெறும் 47 இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் அவர் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் அந்த அணியை சேர்ந்த தமீம் இக்பால் 53 இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் அதை ஹக் முறியடித்துள்ளார்.