இலங்கை அரசாங்கம் தமது வரவு செலவு திட்டத்தை மேலும் வெளிப்படைத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெரிட்டே என்ற சர்வதேச புத்திஜீவிகள் ஆய்வு நிறுவனம் ஒன்றே இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
வெளிப்படைத் தன்மைக் கொண்ட வரவு செலவு திட்டத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டிருப்பதாகவும்
ஆனாலும் தென்னாச்சிய நாடுகளுக்கு மத்தியில் இலங்கை குறைந்த தரத்தைக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் வரவு செலவு திட்டத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய வகையிலும், தொழில்நுட்பம் சாராத வரவு செலவு திட்ட ஆவணங்களைக் கொண்டதாகவும் இலங்கை அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சர்வதேச புத்திஜீவிகள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சர்வதேச தரத்தக்கு அமைய, வரவு செலவு திட்டம் குறித்த தகவல்களை முறையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.