வரலற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயக வருடாந்த திருவிழா இந்த மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்திரிகர்ளும், இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 500 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையில் அதிகாலை மணி முதல் பேருந்து சேவைகள் இடைபெறுவதுடன், குறிகட்டுவனில் இருந்து கச்சத்தீவு வரையிலான படகு சேவை காலை 5 மணி முதல் 2 மணி வரைக்கும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு சேவைக்காக 300 ரூபாய் கட்டணம் அறவிடப்படும்.
நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவுக்கு ஒருவழி கட்டணமாக 225ரூபாய் அறவிடப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.