Loading...
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வருகைக்கு நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தொடர்பான ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை குஷ்பு இன்று நெல்லை சென்றுள்ளார்.
Loading...
இந்நிலையில், குஷ்புவின் வருகை தொடர்பான போஸ்டரில் ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயர் இல்லாததால் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நெல்லையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கும் அவர்கள் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
Loading...