வங்கதேச டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட ஜோடி பாட்னர்ஷிப் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இலங்கை- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை இதுவரை 3 விக்கெட்கள் இழப்புக்கு 469 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் குசல் மெண்டீஸ் 196 ஓட்டங்களும், தனஞ்செய சில்வா 173 ஒட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 308 ஓட்டங்கள் பாட்னர்ஷிப் எடுத்துள்ளனர்
இதன் மூலம் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக பாட்னர்ஷிப் ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை ஜோடி என்ற பெருமையை மெண்டீஸ்- சில்வா ஜோடி பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜெயசூர்யா – மஹானாமா ஜோடி 576 ஓட்டங்களுடனும், இரண்டாம் இடத்தில் சங்ககாரா – மார்வன் அட்டப்பட்டு ஜோடி 438 ஓட்டங்களுடனும் உள்ளனர்.