Loading...
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர்ச் சந்தி ஏ 9 வீதியில் பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம காவல்துறையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றும் பெண் காவல்துறை உத்தியோகத்தரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
Loading...
காயமடைந்த பெண் காவல்துறை அதிகாரி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் அதிகாரியின் கணவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் காவல் துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...