யாழில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.01.2018) உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.
குறித்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே பிரதம விருந்தினராக கலந்துகொள்ள யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முப்படைகளின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்களின் இன்னிசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டு அணிவகுப்பும் இடம்பெற்றது.
மேலும் வடமாகாண ஆளுநர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டன.
அதன்பின்னர் வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில், முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.