இன்றைய 70ஆவது சுதந்திர தினத்தில் நாம் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையின் 70 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய 70ஆவது சுதந்திர தினத்தில் நாம் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால
நாட்டைப் பிரிக்க முயன்ற விடுதலைப் புலிகளால் தாம் 26 வருடங்களாக யுத்தம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த யுத்ததினாலேயே நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால
இவற்றிலிருந்து மீண்ட தாம் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வறுமையை போக்க வேண்டும் ஊழல், மோசடி, களவு என்பவற்றை ஒழிக்க வேண்டும். அதற்காக நாம் உண்மையாகவும், தைரியமாகவும், தூய்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை ஒழித்து பரிசுத்தமான அரசியலை முன்னெடுப்பதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால
நாட்டு மக்கள் இன, மொழி, மத பேதமின்றி சுதந்திரத்துடனும் பயமின்றியும் வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் பயன்தரும் ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதே தமது இலக்கு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால இந்த இலக்கை அடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சகலரும் தன்னுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
70වන අභිමානවත් නිදහස්දින සැමරුම් උළෙල- ගාලුමුවදොර සිට සජීවීව70 வது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இருந்து நேரடியாக.
Publié par Maithripala Sirisena sur samedi 3 février 2018