தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டம் மாலை 5 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை தாங்குகின்றார்.
குறித்த கூட்டத்தில், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலா அமைப்பின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.