கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக கடற்தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரம் நாட்டுப்படகு கடற்தொழிலலாளர்கள் பாரம்பரிய உரிமைகள் மீட்டு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்காக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் ராமேஸ்வரம் பகுதி பாரம்பரிய கடற்தொழிலாளர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும்,
அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கச்சத்தீவிற்கு ராமேஸ்வரம் தொழிலாளர்கள் நாட்டுப்படகில் செல்வதற்கு தொடர்ந்தும் ஐந்தாவது தடவையாக இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகு கடற்தொழிலாளர்களின் நூற்றாண்டு கால உரிமையை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கதென ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.