Loading...
தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரித்துள்ளது.
திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலையில், தமிழ் வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்ளப்படாமையை தமிழுக்கு அங்கிகாரம் இல்லை என்ற கருத்தியலை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
Loading...