பிணைமுறி மோசடி விவகாரத்தில் அர்ஜுன் அலோசியஸ் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டவேளை அவரது மனைவி குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் அழுது மன்றாடி தனது கணவரை கைது செய்ய வேண்டாமென இறைஞ்சினாரென அறியமுடிந்தது.
அர்ஜுன் அலோசியஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு வெளியே அழைத்து வரப்பட்டபோது அவருடன் கண்ணீருடன் வெளியே வந்த திருமதி அர்ஜுன் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடமும் தனது கணவரை படமெடுக்க வேண்டாமென கெஞ்சினாரென தெரிவிக்கப்பட்டது.
பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் அனைத்தும் பக்கச் சார்பாக நடந்து கொண்டதாகவும் அங்கு குறிப்பிட்ட அவர் படமெடுக்க முயன்ற ஒருவரை தடுக்க முற்பட்டா ரென்றும் தெரியவந்தது.
எப்படியோ கணவரின் கைது விடயத்தில் கடும் வேதனையில் அவர் நடந்து கொண்ட விதம் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழச் செய்ததாம்.