Loading...
லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக்கழகத் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
Loading...
துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது. லஞ்ச ஒழிப்புதுறையின் அறிக்கையை பெற்ற பின் ஆளுநர் இது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிவித்த அமைச்சர்,
புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Loading...