மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீப்பிடித்து எரிந்துள்ளது, புறக்காள் கருகியுள்ளது. இது ஆட்சிக்கு ஆபத்து என்பதின் அறிகுறியாகும் என பிரபல ஜோதிடர் வித்யாதரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சில தினங்களுக்கு முன்னர் தீ பயங்கரமாக கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீயை அனைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி அனைத்தனர்.
இதுமட்டுமல்லாமல் கடந்த அக்டோபர் மாதம் பொற்றாமரை குளத்து நீர் வெள்ளமென கோயில் வளாகத்தில் சுழ்ந்தது.
இந்த நீர் எப்படி சூழ்ந்தது என இதுவரை தெரியவில்லை.
பஞ்ச பூதங்களான நீரும், நெருப்பும் வந்துவிட்டதால் இது ஆபத்துக்கான அறிகுறியென ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல ஜோதிடர் வித்யாதரன் கிரகங்களின் நிலைகளை ஆராய்ந்து அவை பலவீனமடைந்துள்ள நேரத்தில் இதுபோல் தீவிபத்து நடந்துள்ளது நல்லதல்ல என கூறியுள்ளார்.
இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து. ஆட்சியை தொடரக் கூடியதில் நிறைய சிக்கல்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு கெடும் நிலை, ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும் என கூறியுள்ளார்.
அதே போல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.