நேபாளத்தில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக நேபாள அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இருந்த பல பெண்கள் வேறு நாடுகளில் தொழில்பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.
இதுதொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின், குடியேறிகளுக்கான மனிதஉரிமைகள் துறை விசேட அறிக்கையாளர் ஃபெலிமப் கொன்சலேஸ் மொராலெஸ் தெரிவித்துள்ளார்