இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி தென்னாபிரிக்கா கேப் டவுனில் இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும் , ஏ.பீ.வில்லியர்ஸ் , டூ பிளசிஸ் மற்றும் குவின்டன டீ கொக் ஆகியோர் உபாதைக்குள்ளாகியுள்ளதால் தென்னாபிரிக்கா அணிக்கு இந்த போட்டி மிகுந்த சவாலாக அமையும் என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இளையோர் உலக கிண்ணத்தை வென்ற இந்திய இளம் வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையோர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் இதனைத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்தை இந்திய அணி வெற்றிக்கொண்டது.
இந்தநிலையில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே இந்த பரிசுத்தொகை வீரர்களுக்கு போதாது என ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.