முல்லைத்தீவு கடலில் ஆயிரக்கணக்கான சாவாலை வெள்ளிமீன்கள் இன்றைய தினம் சிக்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களின் மீன்பிடி தொழில் நடவடிக்கையின் மூலம் இவ்வாறான பெறுமதியான மீன்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மீன்கள் ஒரு கிலோகிராம் 370 ரூபா விலைக்கு முல்லைத்தீவில் கொள்வனவு செய்யப்பட்டு தென்னிலைங்கையில் 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை தொடக்கம் நன்பகல் வரைக்கும் முல்லைத்தீவு மீனவர்களிடம் இருந்து 958 கிலோகிராம் சாவாலை வெள்ளி மீன்களை வியாபாரிகள் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் கடந்த காலங்களில் காலநிலை மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கபட்டிருந்த மீனவர்கள் இன்றைய தினம் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.