கடந்த 2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார்.
அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பயமுறுத்தும் வகையிலேயே செயற்பட்டார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேச்சுக்கு கூட்டமைப்பை அழைத்தபோதும் கூட்டமைப்பு பேச்சுக்கு வரவில்லை என்று மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதில் வழங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.