அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரிட்டன் இளவரசி கேட்டைப் போன்று ஒரு வாரம் வாழ்ந்துள்ளார்.
26 வயதான ரெபேக்கா நெல்சன், அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றில் மூத்த பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார்.
ஒரு ஆய்வுக்காக அவர் ஒரு வாரம் இளவரசி கேட்டைப் போல வாழ்வதற்கு முன்வந்தார்.
இளவரசி போன்று கடுமையான உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். பொது வாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இளவரசிக்கு கொடுக்கப்படும் வகுப்புகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குப் பணிக்கப்பட்டது.
இளவரசி கேட்டைப் போலவே உடையணிந்து ஒளிப்படங்களும் எடுக்கப்பட்டன.
‘விலையுயர்ந்த நகைகள், மக்களின் அன்பும் ஆதரவும் என ஒரு இளவரசியைப் போல் வாழ வேண்டும் என்னும் ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது என்னும் போது இளவரசிப் பதவியா, ஆளை விட்டால் போதும் என்று இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.