முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கிய மும்பை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
சாராவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த நிதின் ஷிஷ்கோட் என்ற வாலிபர் சாராவின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஷர்தா பவார் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியிருந்த நிதினை மும்பை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து லேப்டாப், செல்போன் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர்.
அவர் மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் நிதின் போலீஸ் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது